நடந்து சென்றவரை மிரட்டி ரூ. 1 லட்சம் வழிப்பறி: – ஒருவர் கைது

0 311
Stalin trichy visit

திருச்சி மேலக்கல்கண்டார்கோட்டையை சேர்ந்த சிவக்குமார் (33). கடந்த 5 ஆம் தேதி இரவு டி.வி.எஸ்.டோல்கேட் சாலையில் வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது காரில் வந்த 3 நபர்கள் சிவக்குமாரைவழிமறித்து ரூ.1இலட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றதாக பெறப்பட்ட புகாரை பெற்று, கண்டோன்டெண்ட் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, தனிப்படை அமைக்கப்பட்டு, தீவிர புலன்விசாரணை செய்யப்பட்டடது.
மேற்கண்ட வழக்கு தொடர்பாக திருச்சி மாநகர காவல் ஆணையர் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு, புலன்விசாரணையில் சந்தேகநபர்களின் நடவடிக்கையை தீவிரமாக கண்காணித்தும், சந்தேக நபர்களின் அலைபேசி எண்களின் விபரங்களை சேகரித்து தொடர்ந்து விசாரணை செய்யப்பட்டு வந்தது. விசாரணையில் வழக்கில் சம்மந்தப்பட்ட இசக்கிராஜா ( 27), என்பவரை விசாரணை செய்தபோது, கொள்ளை சம்பவத்தில் ஈடுப்பட்டதை ஒப்புக்கொண்டார். எனவே எதிரி கைது செய்யப்பட்டு, வழக்கு சொத்து கைப்பற்றப்பட்டு, வழக்கின் எதிரி நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்கள்.
மேற்கண்ட வழக்கில் சிறப்பாக பணியாற்றி துரிதமாக புலன்விசாரணை செய்து எதிரியை கைது செய்த காவல் உதவி ஆணையர் கண்டோன்மென்ட் சரகம் மற்றும் கண்டோன்மென்ட் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் மற்றும் புலன்விசாரணில் துணையாக இருந்த காவல் ஆளிநர்களை திருச்சி மாநகர காவல் ஆணையர்கார்த்திகேயன்,  பாராட்டினார்.

Leave A Reply

Your email address will not be published.