இளம் பெண்ணிடம் தகராறு செய்தவர் கைது

0 312
Stalin trichy visit

திருச்சி மாநகரம் விஜயாபுரம் கொடியாலம் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் வசுந்தரா(18). இவர் மங்கள்&மங்கள் கடையில் பணியாற்றி வருகிறார் நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து வீடு திரும்பி கொண்டு இருந்த வசுந்தராவை சிந்தாமணி அண்ணா நகர் பூசாரி தெருவை சேர்ந்த மணிகண்டன்(25) என்ற வாலிபர் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்தி தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார். மேலும் அவரை பின்தொடர்ந்து வீடு வரை சென்று அவரை அடித்து துன்புறுத்தி உள்ளார் இது குறித்து வசுந்தரா கோட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் மணிகண்டனை கைது செய்தனர் மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தொடர்புசாரணை நடைபெற்று வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.