திருச்சி உறையூர் பாண்டமங்கலம் பகுதியை சேர்ந்தவர் மேகராஜன் (40). இவர் கடந்த 11 வருடங்களுக்கு முன்பு செண்பகவல்லி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இவருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் ஒரு பெண் குழந்தை உள்ளது கடந்த இரண்டு வருட காலமாக செண்பகவல்லி வயிற்று வலியால் பாதிக்கப்பட்டு அதற்கு சிகிச்சையும் பெற்று வந்தார் கடந்த 12ஆம் தேதி மேகராஜன் பணி நிமித்தமாக வெளியூர் சென்று இருந்த நிலையில் வயிற்று வலி காரணமாக நேற்று செண்பகவல்லி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் இது குறித்து அறிந்த உறையூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் மேகராஜன் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.