சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது..

0 308
Stalin trichy visit

திருச்சி கல்லூரியில் தங்கி படிக்கும் 16 வயது சிறுமியை அவரது தாய் வாங்கிய கடனுக்காக மிரட்டி கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்தும் அதனை செல்போனில் வீடியோ எடுத்து மிரட்டியதாக குழந்தை நலக்குழு தலைவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்ததில் ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த கருணாநிதி என்பவரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டு இருந்தது.

மேலும் இவர் மீது பெண்கள் மற்றும் குழந்தைகள் எதிரான பாலியல் குற்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபடுபவர் என விசாரணைகள் தெரிய வந்ததை அடுத்து திருச்சி கன்டோன்மெண்ட் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்த திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கருணாநிதி சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.