பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாளையொட்டி கட்சி கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

0 317
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் கல்லக்குடியில் புள்ளம்பாடி ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி அலுவலகம் மற்றும் பேருந்து நிலையத்தில் புள்ளம்பாடி வடக்கு மண்டல அமைப்பு சார்பில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி 71 வது பிறந்த நாள் விழா, கட்சி கொடியேற்று விழா நடைபெற்றது. விழாவிற்கு புள்ளம்பாடி மண்டல தலைவர் முத்தரசு தலைமை தாங்கினார்.

மாவட்ட கலாச்சாரப் பிரிவு துணைத் தலைவர் சந்தோஷ், பொதுச் செயலாளர் தர்மராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் மண்டல மேற்பார்வையாளர் தாளக்குடி விஜய் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கட்சி கொடியேற்றி பேசினார். மேலும் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் சாமி சண்முகம் வாழ்த்துரை வழங்கினார். விழாவில் புள்ளம்பாடி மற்றும் கல்லக்குடி பகுதி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.