அடுத்தடுத்து நடந்த சாலை விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய போலீஸ்காரர்!

0 384
Stalin trichy visit

திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் திருவெறும்பூர் அருகே உள்ள பெல் நிறுவன ஊழியர்கள் பாதுகாப்பாக தொழிற்சாலைக்கும் குடியிருப்பு பகுதிக்கும் சென்று வருவதற்கு ஏதுவாக திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அந்த மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெறுவதால் திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் மெயின் சாலைகள் அடைக்கப்பட்டு திருச்சியில் இருந்து தஞ்சை நோக்கி செல்லும் வாகனங்களும் தஞ்சையில் இருந்து திருச்சி நோக்கி வரும் வாகனங்களும் சர்வீஸ் ரோடு பகுதியில் செல்வதற்காக மாற்று ஏற்படு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் சர்வீஸ் சாலையில் செல்வதற்கு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும் மெயின் சாலையில் முழுமையாக அடைக்காமல் பாலம் வேலை பார்ப்பவர்கள் அலட்சியப் போக்குடன் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் திருச்சி தஞ்சை

 

தேசிய நெடுஞ்சாலையை பராமரித்து வரும் மதுக்கான் நிறுவனம் சாலையில் உள்ள விளக்குகளை பராமரிக்காததால் சாலை இருட்டாக உள்ளது. அதனால் நேற்று இரவு பட்டு கோட்டை காவல்நிலையத்தில் காவலராக வேலைப் பார்த்து வரும் சேர்ந்த வினித் (வயது 40) என்ற போலீஸ்காரர் திருச்சியில் இருந்து பைக்கில் தஞ்சைக்கு சென்றபோது பெல் பால பணிக்காக அடைக்கப்பட்டிருந்த மெயின் சாலை, சாலை சரியாக அடைக்காததால் மெயின் சாலை வழியாக அதிவேகமாக சென்றவர் சாலையில் நடுவே இருந்த மண்முட்டின் மீது பைக் ஏறி விழுந்ததில் வினீத் மண் முட்டு பள்ளத்தில் தூக்கிவீசப்பட்டு பலத்த அடிப்பட்டு கடந்தபோது. பின்னால் வந்த திருச்சி நத்தமாடிபட்டி யிலிருந்து புதுக்குடி வந்த காரில் வந்த டெல்லி ராஜா (வயது 43), சதீஷ்குமார் (வயது 25) அதே மெயின் சாலையில்

 

வேகமாக காரில் வந்துள்ளனர். அப்படி வந்த கார் சாலை மண்முட்டில் ஏரிய போது சிக்கி கொண்டது. அதனால் முன்னால் சென்று பைக்கில் மண் முட்டு கீழே விழுந்து கடந்த வினித் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். கார் மண்முட்டில் ஏறி இறங்கியிருந்தால் வினித்தின் நிலையை கேட்க வேண்டாம். இச்சம்பவம் திருவெறும்பூர் காவல் நிலையம் எதிரே நடந்ததால் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த திருவெறும்பூர் போலீசார் வினித்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து திருவெறும்பூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை

ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்துக்கு காரணம் திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையை பராமரித்து வரும் மதுபான நிறுவனம் சாலைகளில் மின் விளக்குகளை எரிய விடாமல் இருப்பதும் சாலையின் பால பணி நடைபெறும் பொழுது அதற்குரிய தடுப்புகளை முழுமையாக அமைக்காமல் இருந்ததே இந்த விபத்துக்கு காரணம். இதனால் இவர்கள் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்போது தான் இது போன்ற விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்க முடியும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.