நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தல்!
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும்நாள் கூட்டம்
நடைபெற்றது. இதில் சமூக நீதி பேரவையினர் பலர் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியர் சிவராசுவிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
திருச்சி தஞ்சை பண்ணையிலிருந்து தேசிய நெடுஞ்சாலை திருச்சி மாநகரம், பால் துவாக்குடி வரை NH-67 உள்ளது. மேற்படி சாலையில் இருபுறங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளால் தொடர்ந்து தினமும் விபத்துக்கள் ஏற்பட்டு பல உயிரிழப்புக்களும், உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டும். வாகனங்கள் மோசமாக சேதமடைந்து பெரும் பொருளாதார இழப்புகளை மக்கள் சந்திக்கின்றனர் என்பதை பலரும் அறிந்ததே மேலும் வாகன நெரிசலால் மிகுந்த போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. ஏற்கனவே தாங்கள் திருச்சி அரியமங்கலம் SIT அருகில்
உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி நடவடிக்கை எடுத்தது போல. பொதுமக்களின் நலன் கருதி உயிர்காக்கும் பொருட்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம். திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலை NH-67ல் பால்பண்ணை அருகில் F2 மதுபான கடை பார் அமைந்துள்ளது. இது உயர்நீதி மன்றம் மற்றும் உச்சநீதிமன்ற உத்திரவிற்கு எதிரானதாகும். எனவே உச்சநீதிமன்ற உத்திரவின் படி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மதுபானபார் கடையை அகற்ற உத்திரவிட வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் அதில் தெரிவித்துள்ளார்.