திருடர்களை மடக்கி பிடித்த கிராம மக்கள்
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பல்வேறு பகுதிகளில் இரும்பு உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் திருடிவிட்டு ஆம்னி வேனில் தப்பிச் செல்ல முயன்ற நபரை வாலையூரில் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் மடக்கிப் பிடித்தனர்.
மண்ணச்சநல்லூர் அருகே பாலையூர் ரெட்டியார் தெருவைச் சேர்ந்த நடராஜன் மகன் 45 வயதான செந்தில்குமார். இவர் பாலையூர் கிராமத்தில் ரைஸ் மில் நடத்தி வருகிறார். கடந்த 14ம் தேதி மாலை ரைஸ் மில்லை பூட்டிவிட்டு சென்றுவிட்டார். பின்னர் மறுநாள் ரைஸ் மில்லுக்கு வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த இரும்பு பொருட்கள் திருட்டுப் போனது தெரியவந்தது. இதேபோல் அந்தப் பகுதியில் பல்வேறு பல்வேறு இடங்களில் இரும்பு உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் திருடு போனதும் தெரியவந்தது. இந்நிலையில் நேற்று இரவு தேனூர் கிராமத்தில் ஆம்னி வேன் ஒன்று நின்றுள்ளது. சந்தேகம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் ஆம்னி வேனை சோதனை செய்தபோது அதில் இரும்பு பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து ஆம்னி வேனில் இருந்த நபரிடம் விசாரித்த போது அவர் ஆம்னி வேனை அங்கிருந்து எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றார். இதையடுத்து அப்பகுதி இளைஞர்கள் வாழையூர் கிராம இளைஞர்களுக்கு தகவல் கொடுத்தனர். இதில் உஷாரான இளைஞர்கள் வாழையூர் கிராமத்திற்கு ஆம்னி வந்தபோது இளைஞர்கள் வேனை மறித்துள்ளனர். அதையும் மீறி தப்பி சென்றதால் இளைஞர்கள் பொதுமக்கள் ஆம்னி வேனை துரத்தியபோது ஆம்னி வேன் கட்டுப்பாட்டை இழந்து அங்குள்ள மின்கம்பத்தில் மோதி நின்றது. இதில் ஆம்னி வேனை ஓட்டி வந்த நபருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் ஆம்னி வேனில் ரைஸ் மில்லில் திருட்டுப் போன இரும்பு பொருட்கள் இருந்ததால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் இளைஞர்கள் அந்த நபருக்கு தர்ம அடி கொடுத்தனர். இந்நிலையில் ஆம்னி வேனிலிருந்த கேஸ் கசிந்ததால் இது குறித்து சமயபுரம் தீயணைப்பு நிலையத்திற்கும், சிறுகனூர் காவல் நிலையத்திற்கும் தகவல் கொடுத்தனர். தகவலறிந்த சமயபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் முத்துக்குமார் தலைமையில் வீரர்கள் சென்று தண்ணீர் அடித்து கேசை அணைத்தனர். மேலும் சம்பவத்துக்கு வந்த சிறுகனூர் போலீசார் இரும்பு பொருட்கள் திருடிய நபரை பிடித்து விசாரணை செய்தனர்.விசாரணையில் திருச்சி மேல சிந்தாமணி மேல தெருவை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் 33 வயதான விக்னேஷ்வரன் என தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்த சிறுகனூர் ஆம்னி வேலை பறிமுதல் செய்தனர். பின்னர் பொதுமக்கள் கொடுத்த தர்ம அடி மற்றும் வேன் மோதியதில் காலில் ஏற்பட்ட காயத்தால் விக்னேஸ்வரனை சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்து
வமனையில் அனுமதித்தனர்.