நிலைதடுமாறி கீழே விழுந்த பெண் சிகிச்சை பலனின்றி சாவு

0 519
Stalin trichy visit

திருச்சி பாலக்கரை கெம்ஸ்டவுன் பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ். இவருடைய மனைவி பாக்கியசெல்வி(வயது 48). இவர் சம்பவத்தன்று அதேபகுதியில் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாரதவிதமாக திடீரென தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதையடுத்து அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனயைில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து பாலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.