பேருந்தில் சென்ற பெண்ணிடம் பணம் நகை பறிப்பு!
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மணக்காலில் பேருந்தில் சென்ற பெண்ணிடம் 3 பவுன் நகை ரூபாய் 15,000 ரொக்கம் மர்ம நபர்கள் ஆட்டையை போட்டு சென்றனர்.
மணக்கால் கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் ராமன். இவருடைய மனைவி 72 வயதான அகிலாம்பாள். இவர் நேற்று மணக்கால் பேருந்து நிலையத்திலிருந்து மண்ணச்சநல்லூரில் உள்ள தனது மகள் வீட்டிற்கு செல்வதற்காக அரசு பேருந்தில் ஏறி உள்ளார். அப்போது அவர் கைப்பையில் 15 ஆயிரம் ரொக்கமும், கழுத்தில் 3 பவுன் செயின் அணிந்துள்ளார். இந்நிலையில் லால்குடி பேருந்து நிலையம் வந்தபோது கழுத்தில் கிடந்த 3 பவுன் செயின், கைப்பையிலிந்த ரூ.15 ஆயிரம் ரொக்கம் மாயமானது. இதனால் அதிர்ச்சி அடைந்த அகிலாம்பாள் லால்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் லால்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து பணம் நகையை ஆட்டைய போட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.