சிறுமியை கடத்திய இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது
திருச்சி திருவெறும்பூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் துவாக்குடி அண்ணா நகர் எம்.டி சாலை பகுதியைச் சேர்ந்த குமார் மகன் குட்லு என்கிற ரமேஷ் அரவிந்த்(24) என்பவர் முகநூல் மூலமாக அறிமுகமாகி இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் ரமேஷ் அரவிந்த் சிறுமியை கடந்த மாதம் 11 ஆம் தேதி கடத்திச் சென்றதாக பெற்ற புகாரின் பேரில் திருவெறும்பூர் மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து சிறுமியை தேடிவந்தனர். இந்த நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை அரவிந்தை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர் ஆசை வார்த்தை கூறி சிறுமியை அழைத்துச் சென்றது உறுதியானது. இதையடுத்து மகளிர் போலீசார் ரமேஷ் அரவிந்தை போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்