திருவானைக்கோவிலில் ஆனித் திருமஞ்சனத்தை முன்னிட்டு தீர்த்தக் குடம்

0 329
Stalin trichy visit

திருவானைக்கோவில் ஆனித் திருமஞ்சனத்தை முன்னிட்டு வெள்ளி குடத்தில் காவிரி ஆற்றில் இருந்து மங்கள வாத்தியங்கள் முழங்க யானை அகிலா மீது தீர்த்தக் குடம் வைத்து ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது வெள்ளி குடம் உள்பட 10 குடங்களில் திருமஞ்சனங்கள் கொண்டுவரப்பட்டு சாமி சன்னதி அருகே உள்ள நடராஜர் சன்னதியில் தீர்த்த குடங்கள் வைக்கப்பட்டது இரவு ஏழு மணி அளவில் நடராஜருக்கும் அன்னை சிவகாமி அம்மையாருக்கும் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர் அதனைத் தொடர்ந்து புதன்கிழமை காலை நடராஜரும் சிவகாமி அம்மையாரும் தனித்தனியாக வெள்ளி மஞ்சத்தில் எழுந்தருளி நான்காம் பிரகாரத்தை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர் அப்பொழுது ஊடல் உற்சவம் வைபவ நிகழ்ச்சி நடைபெற உள்ளது இதற்கான ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையர் ஆரவிச்சந்திரன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்

Leave A Reply

Your email address will not be published.