திருவானைக்கா கோயில் யானை அகிலாவிற்கு இன்று மாலை பிறந்தநாள்

0 376
Stalin trichy visit

சிவ முக்தி பெற்ற திருவானைக்கா கோயில் யானை அகிலாவிற்கு இன்று மாலை பிறந்தநாள் விழா யானை வழிபட்டு முத்தி பெற்ற திருத்தலம் ஆனது திரு ஆனைக்கா இதனால் இத்தளத்தில் யானைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது நாள்தோறும் சிவ பூஜைக்காக யானை அகிலா திருமஞ்சனம் எடுத்துக்கொண்டு வருகிறது மேலும் பகலில் நடைபெறும் உச்சிக்கால பூஜையின்போது அம்பாள் வேடம் தரித்த அவருடன் சென்று யானை அகிலா இறைவனை பூஜிக்கும் காட்டில் வாழும் யானைகள் அனைத்தும் நாட்டில் மனிதர்களோடு வாழ முடியாது இதில் ஒரு சில யானைகள் மட்டும்தான் மனிதர்களோடு வாழ்ந்துகொண்டிருக்கிறது அப்படி வாழும் யானைகளை சில கோயில்களில் இறை பணியாற்றி தொண்டு செய்து வருவது பெரும் பாக்கியம் பெற்றதாகும் அதில் திரு ஆனைக்காவில் சிவனை பூஜித்து முக்தி பெற்றது யானை ஆகும் தற்போது சிவனை பூஜித்து தொண்டாற்றி வரும் முக்தி பெற்ற யானை அகிலாவிற்கு இன்று 19 வயது முடிந்து இருபதாவது வயதில் அடியெடுத்து வைக்கிறது இதனை ஒட்டி இன்று மாலை நான்கு மணிக்கு அகிலா யானைக்கு பூஜைகள் செய்யப்பட்டு அதற்கு விருப்பமான பழங்கள் வழங்கப்பட உள்ளது இந்த நிகழ்வில் திரு ஆனைக்கா பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிவ முக்தி பெற்ற யானை அகிலாவின் ஆசிபெற அனைவரும் வாருங்கள்

Leave A Reply

Your email address will not be published.