திருவெள்ளறை புண்டரீகாட்சன் பெருமாள் கோவில் தேரோட்டம்; திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்!

0 331
Stalin trichy visit

திருச்சி திருவெள்ளறை புண்டரீகாட்சன் பெருமாள் கோவில் தேர்திருவிழா நடைபெற்றது. இதையொட்டி பெருமாளுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், திருமஞ்சனம் உள்பட பல்வேறு பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர்களை கொண்டு

அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் பெருமாளை எழுந்தருள செய்து தேரோட்டம் நடைபெற்றது. இதில் சுற்றுப்பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் கோவிலை சுற்றி வலம்வந்து அதன் நிலையை அடைந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.