திருச்சி மாவட்டம், மணப்பாறைகாந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் வினோத் மகன் பிரசாந்த்(வயது 20). இவருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. இந்நிலையில் பிரசாந்த் தனது மனைவியுடன் முக்கொம்பு சுற்றுலா மையம் வந்தார். காவிரி கதவணை அருகே குளித்தபோது ஆழமான பகுதியில் சிக்கிய பிரசாந்த் தண்ணீ ரில் மூழ்கி தத்தளித்தார். அவரது மனைவியின் அலறல் சத்தம் கேட்டு, அருகில் இருந்தவர்கள் தண்ணீரில் குதித்து பிரசாந்தை மீட்டு
சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரசாந்தை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து இதுகுறித்து ஜீயபுரம் போலீசார் வழக்குப்ப திந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.