டீசல் இல்லாமல் நடுரோட்டில் நின்ற சரக்கு லாரியால் போக்குவரத்து பாதிப்பு

0 390
Stalin trichy visit

சேலம் மாவட்டம், எறையூர் பட்டியை சேர்ந்தவர் முத்துசாமி மகன் மகேந்திரன்(வயது 43). இவர் ஒட்டன்சத்திரத்திலிருந்து லோடு ஏற்றிக்கொண்டு திருச்சி காந்தி மார்கெட்டில் இறக்கியுள்ளார். பின்னர் அங்கிருந்து சமயபுரம் அருகே கரியமாணிக்கம் பிரிவு சாலையில் உள்ள ஒரு தனியார் சிமெண்ட் ஆலைக்கு சிமெண்ட் லோடு ஏற்ற சென்றுள்ளார்.

அங்கு லாரியில் சிமெண்ட் ஏற்றிக் கொண்டு சேலம் செல்வதற்காக அங்கிருந்து கிளம்பி வந்துள்ளார். அப்போது நம்பர் 1 டோல்கேட் ரவுண்டானாவில் டீசல் இல்லாமல் லாரி நடு ரோட்டில் நின்றது. இதனால் சுமார் அரை மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவலறிந்த சமயபுரம் போக்குவரத்து மற்றும் கொள்ளிடம் போலீசார் நடுரோட்டில் நின்ற லாரிக்கு டீசல் ஏற்பாடு செய்து லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.