தொட்டியம் திரிபுரசுந்தரி உடனுறை பனங்காட்டீஸ்வரர் திருக்கோயில் வைகாசி பெருவிழாவை முன்னிட்டு திருத்தேர் உற்சவம்.
திருச்சி மாவட்டம் முசிறி அருகே தோட்டத்தில் அமைந்துள்ள திரிபுரசுந்தரி உடனுறை அனலாடீஸ்வரர் திருக்கோயில் வைகாசி விசாக பெருந்திருவிழா நடைபெற்று
வருகிறது. விழாவை முன்னிட்டுகொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார். இந்நிலையில் இன்று வைகாசி திருத்தேர் புறப்பாடு நடைபெற்றது. விழாவை முன்னிட்டு சோமாஸ்கந்தர், அம்பாள் ஆகியோர் திருத்தேரில் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளினார் .
அதனைத்தொடர்ந்து பக்தர்களும் சிவனடியார்களும் தேரோடும் வீதிகள் வழியாக திரு தேரை இழுத்துச் சென்றனர்.
சிவபக்தர்கள் பஞ்ச வாத்தியம் வாசித்த வாறுமுன்னே செல்ல திருத்தேர் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.
விழாவில் முசிறி தொகுதி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன், திமுக நிர்வாகிகளுடன் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தார். திரளான பக்தர்கள் உற்சவத்தில் கலந்து கொண்டனர்.
Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Prev Post