குமுளூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முப்பெரும் விழா
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே குமூளூர் ஊராட்சியில் உள்ள லால்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்லூரியில் ஆண்டு விழா, விளையாட்டு விழா, நுண்கலை மன்ற விழா என முப்பெரும் விழா கல்லூரி வளாகத்தில் உள்ள திறந்த வெளிக் கலையரங்கில் கல்லூரி முதல்வர் முனைவர் மாரியம்மாள் தலைமையில் இன்று நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக லால்குடி எம்எல்ஏ சவுந்தரபாண்டியன் கலந்து கொண்டு மாணவ,மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

இவ்விழாவில் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ஜெய்சங்கர் வரவேற்புரை வழங்கினார். கல்லூரி முதல்வர் மாரியம்மாள் கல்லூரி ஆண்டறிக்கையை வாசித்தார். கலை பண்பாட்டு துறை ஒருங்கிணைப்பாளர் தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் ராஜா நுண்கலை மன்ற விழா அறிக்கை வாசித்தார்.தகவல் தொழில்நுட்ப துறை உடற்கல்வி துறை பொறுப்பு அகிலன் விளையாட்டு அறிக்கை வாசித்தார்.
இவ்விழாவில் கல்லூரி பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், மாணவ மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் கணினி பயன்பாட்டு துறை தலைவர் முனைவர் ராஜா நன்றி உரையாற்றினார்