மூன்று‌ வேளாண் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி விவசாய அமைப்பினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட தீர்மானம் – திருச்சியில் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாய சங்கம்!

0 562
Stalin trichy visit

திருச்சியில் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாய சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் மாநிலத் தலைவர் பூரா.விஸ்வநாதன் தலைமையில் இன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மாநிலத் தலைவர் பூ.விஸ்வநாதன்,தமிழகத்தில் வரும் 27ஆம் தேதி நடைபெற உள்ள மத்திய அரசுக்கு எதிரான பாரத் பந்தில் 3 வேளாண் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி நடக்கும் போராட்டத்தில் தமிழக ஏரி மற்றும் மாற்று விவசாய சங்கத்தின் சார்பில் எனது தலைமையில் சென்னையில் உள்ள எக்மோர் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த 3 வேளாண் சட்டம் என்பது கார்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவான சட்டம் ஆகும். மேலும், இலவச மின்சார திட்டத்திற்கு பைசா வசூல் செய்வதாக செய்திகள் வருகிறது. எனவே, மின்சார திருத்த சட்டத்தை உடனே திரும்பப் பெற வேண்டும்.
மூன்று வேளாண் சட்டங்கள், மின்சார திருத்த சட்டத்தை திரும்ப பெறும் வரை தொடர்ந்து நாங்கள் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.