திருஆரூரான் சர்க்கரை ஆலை விவகாரத்தில் உரிய தீர்வு: அன்பில் மகேஸ் அமைச்சர் உறுதி
திருஆரூரான் சர்க்கரை ஆலை விவகாரத்தில் உரிய தீர்வு: அமைச்சர் உறுதி
சென்னை, மார்ச் 28: திரு ஆரூரான் சர்க்கரை ஆலை விவகாரத்தில் விவ சாயிகளுக்கு உரிய முறையில் தீர்வு காணப்படும்
என்று பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினார்.
சட்டப்பேரவையில் மார்க்சிஸ்ட் சட்டப்பே ரவை உறுப்பினர் நாகை மாலி பேசியது: தஞ்சா வூர் மாவட்டம் கும்பகோணத்துக்கு அருகே திரு மணங்குடியில் உள்ள திரு ஆரூரான் சர்க்கரை ஆலையின் முதலாளி கரும்பு விநியோகம் செய்த விவசாயிகளின் மீது ரூ.210 கோடி கடன் பெற்றுள் ளார். இதனை விவசாயிகளுக்கே தெரியாமல் வாங்கிவிட்டு, சர்க்கரை ஆலையை வேறொருவருக்கு விற்றுவிட்டார். அந்தக் கடன் விவசா யிகள் மீதே உள்ளது. கடன் பிரச்னையிலிருந்து விவசாயிகளை அரசு காப்பாற்ற வேண்டும் என்றார்.
மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லாவும் இதே கோரிக்கையை வலியுறுத்தினார்.
அதற்கு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய் யாமொழி அளித்த பதில்: ஆரூரான் சர்க்கரை ஆலை விவகாரம் தொடர்பாக பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். இந்த விவ காரத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் வராத வகையில் நல்ல முறை யில் தீர்வு காணப்படும் என்றார்.