திருநங்கை கழுத்தை அறுத்து படுகொலை
திருச்சி, நவ. 16 திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே நம்பர் 1 டோல்கேட்டில் உள்ள கொள்ளிடம் ஆற்றின் கரையில் திருநங்கையை கழுத்தை அறுத்து படுகொலை செய்த மர்ம நபர்கள். உடலை கைப்பற்றிய போலீசார் மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
கரூர் மாவட்டம் தரங்கம்பட்டியைச் சேர்ந்தவர் மணிகண்டன் என்கின்ற மணிமேகலை (28). திருநங்கையான இவர் கடந்த 8 மாதத்திற்கு முன்பு மண்ணச்சநல்லூரில் உள்ள மேலகாவல்காரத் தெருவில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நம்பர் 1 டோல்கேட்டில் உள்ள கொள்ளிடம் ஆற்றின் கரையில் நின்று கொண்டிருந்த மணிமேகலையை மர்ம நபர்கள் கழுத்தை அறுத்து படுகொலை செய்து விட்டு தப்பிச் சென்றனர்.இச்சம்பவம் குறித்து தகவலறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு நேரில் விரைந்து வந்த திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் கொலை சம்பவம் குறித்து ஆய்வு செய்து விசாரணை செய்தார்.அப்போது கொலை செய்ய பயன்படுத்திய கத்தியை பறிமுதல் செய்தனர்.
மேலும் சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் நிலா வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுணர்கள் அங்குள்ள தடயங்களை சேகரித்தனர்.மோப்பநாய் நிலா சம்பவ இடத்திலிருந்து சிறிது தூரம் ஓடிச் சென்று நின்றுவிட்டது.
யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை.பின்னர் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த கொள்ளிடம் போலீசார் திருநங்கையை கொலை செய்த மர்ம நபர்கள் யார்? எதற்க்காக கொலை செய்தார்கள்,?திருநங்கையை கொலை செய்வதற்கான அவசியம் ஏன் மர்ம நபர்களுக்கு வந்தது?
பணத்திற்காக கொலை செய்தார்களா அல்லது வேறு ஏதும் காரணம் உள்ளதா என பல்வேறு கோணங்களில் விசராணை செய்து வருகின்றனர். மேலும் நம்பர் 1 டோல்கேட்,
திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து தப்பிச் சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.