இருசக்கர வாகனத்தில் வந்து செல்போனை பறித்து சென்ற நபர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது.

0 47
National

திருச்சி மாநகர காவல் ஆணையர்G.கார்த்திகேயன், திருச்சி மாநகர காவல் ஆணையராக பொறுப்பேற்றது முதல் சரித்திர பதிவேடு குற்றவாளிகள், வழிப்பறி செய்யும் குற்றவாளிகளை கண்டறிந்து, சமூக விரோத செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க மாநகர காவல் துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கியுள்ளார்கள். கடந்த 01.07.22ம்தேதி காலை 05.45 மணிக்கு, ஸ்ரீரங்கம் காந்திரோடு, BG நாயுடு கடை முன்பு, நின்று கொண்டிருந்த ஒருவரிடமிருந்து, இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் செல்போனை (மதிப்பு ரூ.11000/-) பறித்து சென்றதாக பெறப்பட்ட புகாரின்பேரில்  நிவாஸ் (எ) ஸ்ரீநிவாசன் , த.பெ.காமராஜ் என்பவன் மீது வழக்குப்பதிவு செய்தும், கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடாடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் நிவாஸ் (எ) ஸ்ரீநிவாசன் என்பவர் பொதுமக்களுக்கும், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்ததாக திருச்சி மாநகரில் காவல்நிலையங்களில் பல வழக்குள் நிறுவையில் இருப்பது தெரியவந்தது.எனவே, நிவாஸ் (எ) ஸ்ரீநிவாசன்  தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுவதும், பொதுமக்களை அச்சுறுத்தி பணம் கொள்ளையடிப்பதும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர் என விசாரணையில் தெரிய வருவதால், மேற்கண்ட எதிரியின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் G.கார்த்திகேயர் மேற்படி எதிரியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார்கள். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள நிவாஸ் (எ) ஸ்ரீநிவாசன் மீது குண்டர் தடுப்பு சட்டம் ஆணையினை சார்வு செய்தும் சிறையில் அடைக்கப்பட்டார்.

Leave A Reply

Your email address will not be published.

எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்
error: Content is protected !!