ஆடு திருடர்களை பிடிக்க சென்ற திருச்சி சப் இன்ஸ்பெக்டர் வெட்டிக்கொலை – திருச்சி அருகே அதிகாலையில் பயங்கரம்!
திருச்சி மாவட்டம் நாவல்பட்டு போலீஸ் ஸ்டேஷனனில் எஸ்.ஐயாக பணியாற்றியவர் பூமிநாதன் (56) நேற்றிரவு ரோந்து பணியில் இருந்த பூமிநாதன் நாவல்பட்டு ரோட்டில் இரு சக்கர வாகனத்தில் ஆடுகளுடன் வந்த நபர்களை நிறுத்தினார். அவர்கள் நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச்சென்றனர் ஆடுகளை திருடும் கும்பலை சேர்த்தவர்கள் என்பதனை தெரிந்துகொண்ட எஸ்.ஐ பூமிநாதன் அவர்கள் இரு சக்கர வாகனங்களை விரட்டி சென்றார். அந்த ஆசாமிகள் திருச்சி – புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் உள்ள மூகாம்பிக்கை கல்லுரிக்கு அருகே களமாவூர் ரயில்வே கேட் பகுதியில் உள்ள பள்ளத்துப்பட்டி என்ற ஊருக்கு அருகில் சென்றபோது ஒரு டூவிலரை தடுத்து நிறுத்திய எஸ்.ஐ பூமிநாதன் அதில் இருந்த திருடர்களை பிடித்தார்.

இதனை தெரிந்து சென்ற மற்ற நபர்கள் திரும்பி வந்து பூமிநாதனிடம் தங்களது சகாவை விடுமாறு கூறியுள்ளார். ஆனால் பூமிநாதன் முடியாது என கூற அவர்கள் வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக அந்த எஸ்.ஐ பூமிநாதனை தாக்கினார்கள். படுகாயம் அடைந்த எஸ்.ஐ பூமிநாதன் சம்பவ இடத்திலேயே பரிதமாக இறந்தார். திருட்டு கும்பலை சேர்த்தவர்கள் தப்பி ஓடி விட்டனர். அதிகாலை 2 மணியளவில் நடந்த இந்த சம்பவம் சுமார் 5 மணியளவில் தான் அவ்வழி நபர்கள் மூலம் தெரியவந்தது. அடுதிருடர்களை பிடிக்க சென்ற எஸ்ஐ வெட்டிக்கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.