நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யமொழி ஆகியோர் தலைமையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெறுவதாக இருந்த அனைத்து அரசுத் துறைகளின் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தேதி பின்னர் தெரிவிக்கப்படும் செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் தெரிவித்துள்ளார்.