தூண்கள் மீது லாரி மோதல்; பொதுமக்கள் சாலை மறியல்!
திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியை அடுத்த சீகம்பட்டியில் முத்தாலம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலின் முன்பகுதியில் திருவிழாக்காலங்களில் பல்லக்கு வைப்பதற்காக நான்கு தூண்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த வழியாக வந்த லாரி ஒன்று தூண் மீது மோதி முற்றிலுமாக உடைந்து சேதமடைந்தது. இதனால்
ஆத்திரமடைந்த இப்மக்கள் இதுபோன்ற தொடரும் சம்பவங்களுக்கு தீர்வு காண வேண்டும் என்று கூறி சீகம்பட்டியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அறிந்த துவரங்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவே அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.