சாலை விபத்தில் பெண் பலி!
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மேல மஞ்சம்பட்டியைச் சேர்ந்தவர் மனோ இருதயராஜ். இவரது மனைவி ஜெனிபர் (வயது 24). இருவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் சம்பவத்தன்று மலையடிப்பட்டி திருவிழாவிற்கு சென்றுவிட்டு
வீடு திரும்பி வந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த ஜெனிபர் படுகாயமடைந்து திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.