ஆந்திராவில் இருந்து 22 கிலோ கஞ்சா கடத்திய 2 பேர் கைது!
திருச்சி சமயபுரம் அருகே உள்ள சுங்கச்சாவடியில் ஆந்திராவில் இருந்து காரில் கடத்தி வரப்பட்ட 22 கிலோ கஞ்சாவை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். இதில் தேனி மாவட்டம் தேவாரம் பகுதியை

சேர்ந்த ஆசை(வயது 34) புவனேஸ்வரன்(வயது 32) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் பொறுப்பு நீதிபதி கார்த்திக் ஆசாத் முன் ஆஜர்படுத்தி பின்னர் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.