திருச்சி மாவட்டத்தில் இன்று 10வது சுற்று மெகா கொரோனா தடுப்பூசி முகாம் 524 இடங்களில் நடைபெறுவதை தொடர்ந்து, மன்னச்சநல்லூர் வட்டம், திருவெள்ளரை ஊராட்சி சமுதாயக் கூட்டத்தில் நடைபெற்ற மெகா கொரோனா தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.