வீரப்பூர் கன்னிமாரம்மன் கோவில் திருவிழா; மார்ச் 2ம் தேதி தொடக்கம்!

0 458
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த நல்லம்பிள்ளை ஊராட்சிக்குட்பட்ட வீரப்பூர் கன்னிமாரம்மன் கோவில்களின் மாசிப் பெருந்திருவிழா ஆண்டுதோறும் மாசி அமாவாசை தினத்தன்று தொடங்கி தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திருவிழா மார்ச் மாதம் 2ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

மார்ச் 7ம் தேதி வளநாடு கோட்டை கோவிலிலும், மார்ச் 8ம் தேதி படுகளம் கோவிலிலும், மார்ச் 9, 10, 11 ஆகிய மூன்று நாட்களும் வீரப்பூர் கன்னிமாரம்மன் கோவிலில் தொடர்ந்து முக்கிய திருவிழாக்கள் நடைபெறுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.