திருவெறும்பூர் மதுவிலக்கு பிரிவில் பறிமுதல் வாகனங்கள் 27ம் தேதி ஏலம்!
திருச்சி எஸ்.பி மூர்த்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்… “மதுவிலக்கு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட பைக் மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் பொது ஏலம் விடப்படவுள்ளது. திருவெறும்பூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் வரும் 27ம் தேதி காலை 10 மணிக்கு கால் மற்றும் மண்டல துணை இயக்குனர் அரசு தானியங்கி பணிமனை ஆகியோர் முன்னிலையில் பொது ஏலம் விடப்படும்.

ஏலம் கொள்ள விருப்பமுள்ளவர்கள் டெபாசிட் முன்வைப்புத் தொகையாக பைக்கிற்கு 2000, மூன்று சக்கர வாகனத்திற்கு 4000 செலுத்தி ஏலம் கோர ஏல தொகையுடன் தனியாக சரக்கு மற்றும் சேவை வரி செலுத்த வேண்டும். ஏலம் எடுக்க விரும்புபவர்கள் திருவெறும்பூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் வரும் 27ம் தேதிக்கு முன்னதாக வாகனங்களை பார்வையிட்டு ஏலத்தில் கலந்து கொள்ளலாம்” என்று கூறப்பட்டுள்ளது.