மணப்பாறை அருகே கிராம நிர்வாக அலுவலர் தூக்கிட்டு தற்கொலை
மணப்பாறை அருகே கிராம நிர்வாக அலுவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு
திருச்சி மாவட்டம் மருங்காபுரி தாலுகாவில் உள்ள தாதனூர் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருபவர் சுவாதி பிரகாஷ் (வயது 39). இவர் மணப்பாறையை அடுத்த பாரதியார்நகரில் வாடகை வீட்டில் வசித்து வரும் நிலையில் இன்று வீட்டை உள்ளே தாளிட்டுவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மணப்பாறை போலீசார் ஒரு மணிநேர போராஞ்டத்திற்கு பின்னர் கதவை உடைத்து உடலை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விஏஓ எழுதிவைத்திருந்த கடிதத்தையும் கைப்பற்றினர். கடிதத்தில் மனச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட நான் இந்த முடிவை எடுத்துள்ளதாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளார்.