சிங்களாந்தபுரம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்

0 395
Stalin trichy visit

மார்ச் 22 உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் துறையூர் ஊராட்சி ஒன்றியம் சிங்களாந்தபுரம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் ஜோதி தலைமையில் 22.03.23 நடைபெற்றது. துணைத்தலைவர் விஜி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் விமலா, மற்றும் வார்டு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட குழந்தை நலக்குழு உறுப்பினர் முனைவர் பிரபு தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவது, சேமிப்பது, தண்ணீரை பெருக்குவது மற்றும் மழைநீர் சேகரிப்பு குறித்தும் குழந்தை பாதுகாப்பு சம்பந்தமாக குழந்தை திருமண தடுப்புச் சட்டம்,பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம், குழந்தை வளரிளம் பருவ தொழிலாளர் சட்டம் மற்றும் குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம் ,மாற்று குடும்ப முறை திட்டம் , பிற்காப்பு வளர்ப்பு திட்டம், குழந்தை தத்தெடுப்பு குறித்து பேசினார். மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் மகேஸ்வரன் பிளாஸ்டிக் பை தவித்தல், துணிப்பை பயன்படுத்துதல், மரக்கன்று வளர்ப்பதன் அவசியம், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பொதுமக்களின் பங்கு குறித்து பேசினார். கூட்டத்தில் 200க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்துக்கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.