ஒரு ஓட்டு மட்டுமே பெற்ற வாக்காளர்கள்…!

0 272
Stalin trichy visit

திருச்சி மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 5 நகராட்சிகள், 14 பேரூராட்சிகளுக்கு ஒரே கட்டமாக கடந்த 19-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் கூத்தைப்பார் பேரூராட்சியில் வார்டு எண் 18-ல் போட்டியிட்ட அ.ம.மு.க. வேட்பாளர் பிரபாகரன் ஒரு ஓட்டு மட்டுமே பெற்றிருந்தார்.

 

இதேபோல் துவாக்குடி நகராட்சிக்குட்பட்ட வார்டு எண் 12-ல் போட்டியிட்ட தே.மு.தி.க. வேட்பாளர் முகமதுஇஸ்மாயில் ஒரு ஓட்டு மட்டுமே பெற்றிருந்தார். பொன்னம்பட்டி பேரூராட்சியில் பல்வேறு வார்டுகளில் சுயேச்சை வேட்பாளர்கள் அதிக வாக்குகளை பெற்று இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.