ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கு வாக்கி டாக்கி
திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் மற்றும் 14 ஊராட்சி ஒன்றியங்களின் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (கிராம ஊராட்சிகள்) மற்றும் மண்டல அலுவலர்களுக்கு பேரிடர் மேலாண்மைத் திட்டத்தின் கீழ் அதிவிரைவு தகவல் தொடர்புக்கான புஷ் டூ டாக் எனும் வாக்கி டாக்கியினை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் வழங்கினார். உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பிச்சை, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) கங்காதாரணி உள்ளிட்ட அலுவலர்கள் உள்ளனர்.