திருச்சி வீரப்பூர் திருவிழா – கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்றால் கடும் நடவடிக்கை என எச்சரிக்கை

0 640

மிரட்டும் விழிகளுடன் பிரமாண்ட உயரத்தில் இருக்கும் மகாமுனி சிலை, காளை மாட்டுடன் கூடிய சாம்புவன் சிலை தமிழகம் முழுவதும் படை எடுத்து வரும் பக்தர்கள் கூட்டம் என திருச்சி மாவட்டத்தை அடுத்த மணப்பாறையின் காவல் தெய்வமாய் விளங்குவதுதான் வீரப்பூர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள பெரியக் காண்டியம்மன் கோயில் கொண்டு அருள்பாலித்து வரும் தலம்தான் வீரப்பூர். இங்கு பெரியக்காண்டியம்மன் கோயிலுக்கு அருகில் அண்ணன்மார் சுவாமிகள் எனப்படும் பொன்னர்- சங்கர் கோயில் உள்ளது.

முன்பெல்லாம் (சுமார் 30- 40 ஆண்டுகளுக்கு முன்) கட்டுச்சோறு கட்டி எடுத்துக்கொண்டு வீட்டிலிருந்து புறப்பட்டு இரண்டு அல்லது மூன்று நாள் பயணமாக வீரப்பூர் செல்வார்களாம். தங்களின் ஊரில் இருந்து வீரப்பூரின் அடையாளமாக விளங்கும் ஏதேனும் ஒரு கோயிலில் இருந்து புறப்பட்டு வீரப்பூரை மையமாகக் கொண்ட அத்தனை கோயில்களுக்கும் சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டுச் செல்வது வழக்கமாக இருந்தது. அதே வழக்கம் இன்று முதல் தொன்று தொட்டு தொடர்ந்து வருகிறது.

ஆண்டுதோறும் நடைபெறும் வீரப்பூர் திருவிழாவிற்கு திருச்சி மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து உறவினர்களை அழைத்துக் கொண்டு வேனில் செல்கிறார்கள். அங்குள்ள பெரிய கோயிலில் குழந்தைகளுக்கு முடியிறக்கி, பொங்கல் வைத்து, கிடா வெட்டி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.


அந்த வகையில் இந்த ஆண்டு வீரப்பூர் திருவிழா கோலாகலமாக கொண்டாட ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வருகிறது. வருகின்ற 8-ம் தேதி தொடங்கி 10 -ம் தேதி வரை 3 நாட்கள் கோலாகலமாக திரு விழா கொண்டாடப்பட உள்ளது. இதற்காக ஊர் பொதுமக்கள் பல்வேறு முன்னேற்பாடுகளில் இறங்கி உள்ளனர். ஆண்டுதோறும் வீரப்பூர் திருவிழாவின்போது மணப்பாறை வட்டத்தில் மட்டும் மது விற்பனை என்பது வழக்கத்தைவிட கூடுதலாக இரண்டு கோடிக்கு விற்பனை ஆகும்.
படையெடுத்து வரும் மதுகுடிப்போரின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த திருச்சி மாவட்ட டாஸ்மாக் நிர்வாகம் சார்பாக மாவட்டத்தில் கூடுதலாக பணியாளர்கள் நியமிக்கப்படுவர்.

இந்த நிலையில் கடந்த வீரப்பூர் திருவிழா வின்போது டாஸ்மார்க் கடைகளில் ஒரு பாட்டில் 50 முதல் 100 ரூபாய் வரை கூடுதலாக விற்பனை செய்யப்படுவதாகவும், இதனுடன் மட்டும் 15 லட்சம் முதல் 20 லட்சம் வரை பணியாளர்கள்  சுருட்டி கொள்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.இதே போல இந்த வருடமும் தொடரக்கூடாது என பலர் கோரிக்கை வைத்தனர்.

அதன்பேரில் திருச்சி மாவட்ட டாஸ்மார்க் அலுவலர் சக்திவேல் கூறுகையில்:- வீரப்பூர் திருவிழாவின்போது திருச்சி மாவட்டத்தில் இருந்து கூடுதலாக பணியாளர்கள் நியமிக்கப்பட்டு கின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டு திருவிழாவிற்கு 25 கூடுதல் பணியாளர்களை நியமிக்கிறோம். மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

வீரப்பூர் திருவிழாவின்போது டாஸ்மாக் பணியாகளின் செயல் எந்த விதத்தில் இருக்கும் என பொருத்திருந்து பார்ப்போம்.

திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய.. https://chat.whatsapp.com/IFC5JrQzHnf9WurwIfJTIH

Leave A Reply

Your email address will not be published.