உலக பெண்கள் தினத்தை முன்னிட்டு “அமைதிப்பூக்கள்”

0 362
Stalin trichy visit

உலக பெண்கள் தினத்தை முன்னிட்டு , தற்போது உலகில் நிகழ்ந்து வரும், போர்கால மற்றும் பேரிடர் சூழலை, கருத்தில் கொண்டும்,
பள்ளி மாணவிகள் வாழ்வில் உற்சாகமும், ஊக்கமும் மீண்டும் பெறவும், ‘ அமைதிப்பூக்கள் ‘என்ற நிகழ்வை நடத்த இருக்கின்றது. பள்ளி மாணவிகள் இணைந்து , அமைதிப்புறா வடிவில்
நின்று , ‘பெண்கள் மீதும், நாடுகள் மீதும் நிகழ்த்தப்படும் போர்களை முற்றிலும் எதிர்ப்போம்.. வன்முறை தவிர்ப்போம், அமைதி நிலவச் செய்வோம் என்ற உறுதிமொழிகள் ஏற்பர்.
உலக அமைதியை நிலைநிறுத்த, அமைதி தூதர்களாய், அமைதிப்புறாக்கள் பறக்க விடப்படும். உலக பெண்கள் தினத்திற்கான மரக்கன்றுகள் பள்ளி வளாகத்தில் நடப்படும்.
6 ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை அவர்களுக்கான ஓவியப்போட்டிகள் பல்வேறு தலைப்புகளில் நிகழ்த்தப்பட்டு யுகா பெண்கள் அமைப்பின் மூலம் பரிசுகள் வழங்கப்பட இருக்கின்றது.
பள்ளி தலைமை ஆசிரியை R. வசந்தி MSC., M.Ed,M.Phil அவர்கள் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக அல்லிராணி பாலாஜி MBA,MA (psychology) யுகா அமைப்பின் தலைவர் கலந்து கொண்டு பரிசுகள் வழங்கி சிறப்புரை ஆற்றுகிறார் , ஆசிரிய, ஆசிரியைகள், பள்ளி மாணவிகள் நிகழ்வில் பங்கேற்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.