மாணவியை பலாத்காரம் செய்த வாலிபர் கைது!
திருச்சி மாவட்டம், லால்குடியைச் சேர்ந்தவர் ஈஸ்வரன்(வயது 24). இவர் திண்டுக்கல்லில் எலக்ட்ரீசியனாக பணியாற்றி வருகிறார். எடமலைப்பட்டிபுதூர் பகுதியில் உள்ள ஒரு கல்லூரி மாணவியிடம் நெருங்கி பழகி வந்த இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதுகுறித்து மாணவியின் பெற்றோர் எடமலைப்பட்டிபுதூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து ஈஸ்வரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய…https://chat.whatsapp.com/IFC5JrQzHnf9WurwIfJTIH