கரூர் ரயில் நிலைய நடைமேடையிலுள்ள வேப்ப மரத்தின் வளர்ச்சிக்கு உதவிட தண்ணீர் அமைப்பு கோரிக்கை

0 93
Stalin trichy visit

திருச்சி, நவ.13  மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளரும், தண்ணீர் அமைப்பின் செயல் தலைவருமான கே.சி.நீலமேகம் தெரிவித்திருப்பதாவது,  திருச்சியில் இருந்து கோவை செல்ல பாலக்காடு விரைவு வண்டியில் பயணிக்கும் பொழுது கரூர் நிலையத்தில் நிற்கையில் கண்ணில் பட்டது.

கரூர் தொடர்வண்டி நிலையத்தில் நடைமேடை 04 இல் வீரராக்கியம் நோக்கிய (PF no 04 VRQ side) பகுதியில் ஒரு வேப்ப மரம் நன்கு வளர்ந்துள்ளது. பயணிகளுக்கான நிழற் கூடத்தின் மேற்கூரை மரவளர்ச்சிக்கு‌ தடையாக உள்ள நிலையில் உள்ளது.

மரம் மேலே எழும்புவதற்கும் வளர்வதற்கும் ஏதுவாக 2அடி×2அடி(அ) 3அடி×3அடிஅளவில் மேற்கூரைத் தகடை எடுத்து விட்டால் மரம் வளரும். நடைமேடைக்கு எந்த பாதிப்பும் இருக்காது.
பயணிகளுக்கும் எந்த வித இடையூறும் வராது. மரம் வளர வளர பயணிகளின் நிழற் கூடாரத்தில் வெப்பம் தணியும்.  தயவு செய்து மரத்தை வெட்டாமல் வளர்வதற்கு மேற்கூறிய நடவடிக்கை எடுக்க தாழ்மையுடன் வேண்டுகிறேன் என்று ரயில்வே நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

 

Leave A Reply

Your email address will not be published.