மரங்களை வெட்டாமல் ஸ்ரீரங்கத்தில் பேருந்து நிலையம் அமைக்க தண்ணீர் அமைப்பு கோரிக்கை..
ஸ்ரீரங்கம் பேருந்து நிலையம் அமைக்க இருக்கும் (பூங்கா மற்றும் கிளப்) இடத்திலுள்ள மரங்களை வெட்டமால் காக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியிரிடம் தண்ணீர் அமைப்பு கோரிக்கை

உயிர்களை பலி வாங்கும் தெருநாய்களுக்கு பாதுகாக்க ( Blue Cross)ப்ளூ கிளாஸ் இருக்கு,நம் உயிர் வாழ காற்று, நிழல், பூ, பழங்கள் போன்ற நல்லது செய்யும் மரங்களுக்கு பாதுகாப்பு இல்லை. ஸ்ரீரங்கம் பகுதியில் பேருந்து நிலையம் அமைக்க பூங்கா மற்றும் கிளப் இடங்களை தேர்ந்தெடுக்கப்பட்டதாக தெரிவித்து இருக்கிறார்கள்.
பூங்காவில் பல வகையான மரங்கள் நன்றாக வளர்ந்து இருக்கிறது, இந்த நிலையில் தற்பொழுது பஸ் நிலையம் விரிவாக்கத்திற்காக மரங்களை வெட்ட போவதாக தகவல், இங்குள்ள மரங்களை வெட்டுவதற்கு முன் 1மரத்திற்கு பத்து மரங்கள் நட்டு பராமரிக்கபட்டதா?
மரம் வளா்ப்போம், மழை பெறுவோம்’, ‘வனங்களைக் காப்போம்’ என விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வந்தபோதிலும், நிலக்கரி உள்ளிட்ட கனிம வளங்கள் வெட்டியெடுக்கப்படுதல், சுரங்கப் பணிகள், தொழிற்சாலைகளை நிறுவுதல், விமான நிலையங்களை அமைத்தல், ரயில் இருப்புப் பாதைகள் அமைத்தல், அணைகள் – பாலங்கள் அமைத்தல், சாலை அமைத்தல் மற்றும் விரிவாக்கம் செய்தல், கல்வி நிறுவனங்களை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக மரங்களை அழித்ததில் அரசுதான் முக்கியப் பங்கு வகிக்கிறது.
மனிதன் இல்லாவிட்டாலும் மரங்கள் வாழும்; ஆனால், மரங்கள் இல்லாவிட்டால் மனிதன் வாழ முடியாது என்பதே உண்மை. ஒரு மரம் வெட்டப்பட்டால், 10 மரக்கன்றுகள் நட வேண்டும் என்பது விதி. ஆனால், அது ஏட்டளவில் தொடா்வதாகவே தெரிகிறது.
மரத்தை வெட்டுவதற்கும்கூட பல நிபந்தனைகளை அரசு நிர்வாகம் விதித்திருக்கும். விதிக்கப்பட்ட நிபந்தனைகளின்படிதான் ஸ்ரீரங்கத்தில் மரங்களை வெட்டுகிறார்களா என்றும் உறுதி செய்துக் கொள்ளுங்கள்.
பூங்காவில் பல வகையான மரங்கள் நன்றாக வளர்ந்து இருக்கிறது, இந்த நிலையில் தற்பொழுது பஸ் நிலையம் விரிவாக்கத்திற்காக மரங்களை வெட்ட போவதாக தகவல், இந்த மரங்களை வெட்டமால் தடுத்து, மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என தண்ணீர் அமைப்பு சார்பாக கேட்டுக் கொள்கிறோம். விலங்குகளுக்கு நிபந்தனைகளின் படிதான் நடக்கிறதா என கண்காணிக்க Bule Cross, மனிதர்களுக்கு, விலங்குகளுக்கு, பறவைகளுக்கு பயன் தருகிற மரங்களை நிபந்தனைகளின் படிதான் நடக்கிறதா என கண்காக்க Brown Cross அமைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் தண்ணீர் அமைப்பு சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.