ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவி; பரஞ்ஜோதி வழங்கினார்…!

0 271
Stalin trichy visit

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 74-வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. உள்ளாட்சி தேர்தல் முடிவுகளால் துவண்டு போய் உள்ள தொண்டர்களை உற்சாகப்படுத்தும் விதமாக அதிமுக நிர்வாகிகள் ஜெயலலிதாவின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்து திருச்சியில் கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில், திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சர் பரஞ்ஜோதி ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.