“திமுக அரசு தேர்தலுக்கு முன்சொன்னது வேறு தற்போது செய்வது வேறு” ப.குமார் கடும் தாக்கு!

0 490
Stalin trichy visit

திருச்சி திருவெறும்பூரில் அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மே தின பொதுக்கூட்டம் திருவெறும்பூரில் நடந்தது. கூட்டத்திற்கு அண்ணா தொழிற்சங்க பொதுச் செயலாளர் கார்த்திக் தலைமை வகித்தார். திருவெறும்பூர் பகுதி செயலாளர் பாஸ்கர் (என்கிற) கோபால்ராஜ், ஒன்றிய செயலாளர்கள் ராவணன், கார்த்திக், துவாக்குடி நகர செயலாளர் பாண்டியன் ஆகியோர் வரவேற்றனர். இளைஞர், இளம் பெண்கள் பாசறை மாநில செயலாளர் பரமசிவம், திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். இதில் குமார் பேசுகையில், தொழிலாளர்கள் தங்களுக்கு உரிய அடிப்படை தேவைகளுக்கு போராடித்தான் பெற வேண்டியுள்ளது. திமுக தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதி 505. எத்தனை இதில் நிறைவேற்றி உள்ளது என்பது எல்லோருக்கும் தெரியும். அதை ஒவ்வொன்றையும் போராடி தான் நாம் பெற வேண்டியுள்ளது. நடந்து

முடிந்த கிராமசபை கூட்டத்தில் பொதுமக்களும், கட்சியினரும் பெரும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். தற்பொழுது திருவெறும்பூரில் கூடியுள்ள கூட்டம் பொதுமக்கள் திமுக அரசை விரட்ட வேண்டும் என்ற எண்ணம் கொண்டுள்ளார்கள் என்பதை நிரூபித்து உள்ளது. திரைத்துறையில் நடித்த எம்ஜிஆர், ஜெயலலிதா பொதுவாழ்வில் மக்களுக்கு தேவையான அனைத்தையும் செய்தனர். ஆனால் தற்போதைய திமுக தலைவர் முதல்வராகி நடித்து வருகிறார். திமுகவினர் ஒரு மாயையை ஏற்படுத்தி வெற்றி பெற்று உள்ளார்கள். அதிமுகவுக்கு ஒரு சிறிய தொய்வு ஏற்பட்டுள்ளது. இந்த தொய்வை பொதுமக்கள் சரி செய்து விடுவார்கள். திமுக தலைவர் தேர்தலின்போது 505 வாக்குறுதிகள் கொடுத்தது மட்டுமல்லாமல் ஒவ்வொரு தொகுதிக்கும் தனித்தனியாக வாக்குறுதி கொடுத்துள்ளார். அதில் திருச்சி மாவட்டத்திற்கு 35 வாக்குறுதி கொடுத்துள்ளார். அதில் திருவெறும்பூர் தொகுதிக்கு திருவெறும்பூர் பகுதியில் உள்ள சிறு, குறு தொழிற்சாலைகள் பிரச்சனையை தீர்ப்பதற்கு அரசு மற்றும் பெல் நிறுவன பிரதிநிதிகள் மற்றும் சிறு, குறு முதலீட்டாளர்கள் கொண்ட குழுக்கள் அமைக்கப்படும் என கூறினார். இதுவரை செய்யப்படவில்லை. திருவெறும்பூர் பகுதி மக்கள் இரண்டாவது

 

முறையாக தகுதி இல்லாத ஒருவரை தேர்வு செய்து உள்ளீர்கள் அதற்குரிய பலனை அனுபவித்து வருவதாகவும், அதிமுகவை விரும்பி மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய காலம் விரைவில் வரும் என்றார். மேலும் திமுக அரசு நீதிமன்ற உத்தரவுபடி பால்பண்ணை துவாக்குடி திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சர்வீஸ் சாலை அமைக்கப்படும் என்று கூறினார்கள் செய்யவில்லை. அதேபோல் அசூரில் தொடங்கி வேங்கூர் வழியாக திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை இணைக்கும் அரை சுற்றுச் சாலை அமைக்கப்படும் என கூறியுள்ளார் அதற்குரிய எந்த பணியை இதுவரை தொடங்கவில்லை. இப்பொழுது மீண்டும் மின்சார பிரச்சனை தொடங்கி உள்ளது. திமுக தேர்தலுக்கு முன்சொன்னது வேறு தற்பொழுது அதன் செயல் மாறியுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

Leave A Reply

Your email address will not be published.