“கடிக்க வரும் 2 தெருநாய்கள்” கீழே விழும் வாகன ஓட்டிகள்!
திருச்சி உறையூர் பெரிய செட்டித்தெரு பகுதியில் உள்ள ரேஷன் கடை அருகே இரண்டு தெரு நாய்கள் அமர்ந்துகொண்டு அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்களை துரத்தி கடிக்க வருகிறது. இதில் குறிப்பாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை நாய்கள் துரத்துவதினால் அவர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து

வருகின்றனர். மேலும் இந்த வழியாக பெண்கள், சிறுவர், சிறுமிகள் நடந்து செல்ல பெரிதும் அச்சப்பட்டு வருகின்றனர். எனவே இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பொதுமக்களை அச்சுறுத்தி வரும் இந்த இரண்டு தெருநாய்களையும் பிடித்து சென்று வேறு இடத்தில் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள், வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.