கணவன் வேறு திருமணம் செய்ததால் மனைவி தற்கொலை

0 51

 

முசிறி காலேஜ் ரோடு விசாலாட்ஜி நகரை சேர்ந்த விஜயராஜ் மனைவி புவனேஸ்வரி( 56) இவரின் மூத்த மகளான சிவசங்கரிக்கும்( 30) குரு மகாராஜா என்பவருக்கும் திருமணம் முடிந்து 10 வருடம் கடந்தும் குழந்தை இல்லை. இதன் காரணமாக 4 மாதத்திற்கு முன்பு குரு மகராஜா வேறொரு பெண்ணுடன் தொடர்பு கொண்டு தலைமறைவாகி விட்டார் .அக்கம் பக்கத்தில் விசாரித்ததில் திருமணம் செய்து விட்டதாக தெரிய வந்தது. மேலும் குரு மகாராஜா எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை. இதன் காரணமாக மிகுந்த மன வேதனை அடைந்த எனது மகள், விரக்தியால் தானாக தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
என்று புவனேஸ்வரி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் விரைந்து சென்று சிவசங்கரியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக, முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.

National
Leave A Reply

Your email address will not be published.

எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்
error: Content is protected !!