திருச்சி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை பணியாளர்கள் இரு நாள் சிறு விடுப்பு போராட்டம்

0 111

திருச்சி மாவட்டத்தில் 14 ஒன்றியங்களில் உள்ள ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கத்தை சேர்ந்த 780 பேர் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இரு நாள் சிறு விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் .இதில் உதவி இயக்குனர்கள்,பொறியாளர்கள் ஓட்டுநர்கள் தவிர மற்றவர்கள் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

ஊரக வளர்ச்சி துறையில் திணிக்கப்படும் பணி நெருக்கடிகள், காலங்கடந்த ஆய்வுகள்,விடுமுறை தின மற்றும் இரவு நேர ஆய்வுகள், வாட்ஸ் அப் காணொளி ஆய்வுகள், உள்ளிட்டவற்றை முற்றிலும் கைவிட வேண்டும். ஊரக வளர்ச்சித் துறையில் உள்ள ஊராட்சி செயலாளர்கள் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டு நாள் விடுப்பு போராட்டம் நடத்தி வருவதாக தெரிவித்தனர்.

தங்களது கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காவிடில் வருகிற டிசம்பர் மாதம் 14ஆம் தேதி காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் 26 ஆயிரம் பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள் இந்நிலையில் இன்று 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

National
Leave A Reply

Your email address will not be published.

எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்
error: Content is protected !!