கார்கேட்டு அடம்பிடித்த மனைவி; கண்டுகொள்ளாத கணவரால் விபரீத முடிவு!

0 381
Stalin trichy visit

திருச்சி பாலக்கரை பொட்டுக்கார தெருவை சேர்ந்தவர் பெலிக்ஸ். இவர் தில்லை நகரில் டாய்ஸ் அண்ட் கிட்ஸ் என்ற பெயரில் பொம்மை கடை வைத்துள்ளார். இவரது மனைவி சரண்யா(வயது 31). கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவரிடம் கார் கேட்டு சரண்யா அடம் பிடித்து

வந்தார். தற்போது கஷ்டமாக உள்ளது பிறகு பார்த்துக்கொள்ளலாம் கணவர் பெலிக்ஸ் தட்டி கழித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று காலை மீண்டும் கார் கேட்டு கணவரிடம் சரண்யா சண்டை போட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த சரண்யா கதவை உள்தாழிட்டு உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். தீயின் வெப்பம்

தாங்க முடியாமல் சரண்யா அலறியதை அடுத்து கதவை உடைத்து மனைவியை காப்பாற்றி சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனும தித்தார். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த தகவலின் பேரில் பாலக்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.