தனியாக வசித்து வந்த காவலாளி திடீர் தற்கொலை!

0 345
Stalin trichy visit

திருச்சி எடமலைப்பட்டிபுதூர் முருகன்நகர் முதல் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி(வயது 55). அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். தனியாக வசித்து வந்த சுப்பிரமணி வீட்டில், திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் எடமலைப்பட்டிபுதூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் அங்கு சென்று போலீசார் சுப்பிரமணியின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.