திருவிழாக்களில் நகை திருட்டில் ஈடுபட்ட பெண் கைது: 64 1/2 பவுன் நகைகள் மீட்பு

0 994
Stalin trichy visit

 

திருச்சி மாவட்டம் லால்குடி உட்கோட்ட காவல் சராகத்திற்கு உட்பட்ட சமயபுரம், மண்ணச்சநல்லூர், லால்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கோவில் திருவிழா, பேருந்து நிலையம்,கூட்டமாக உள்ள இடங்கள் உள்ளிட்ட பெண்கள் அதிகம் கூடும் இடங்களில் நகைகள் திருடுவது தொடர்கதையாகி வருகிறது.

திருட்டை தடுக்கும் வகையில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித்குமார் உத்தரவின்படி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேபோன்று சமயபுரம் காவல் நிலைய ஆய்வாளர் கருணாகரன் தலைமையில் பல்வேறு இடங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது நம்பர் 1 டோல்கேட் பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்ற பெண் ஒருவரை பிடித்து போலீசார் நடத்திய விசாரணையில் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதால் சமயபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை செய்த போது விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே செல்லியம்மன் கோவில் தெருவை சேர்ந்த 42 வயதான ரேகா என தெரிய வந்தது. இவருக்கு திருமணம் ஆகி கணவனை பிரிந்து வாழ்ந்து வருகிறார் பல வருடங்களாக பல்வேறு இடங்களில் பெண்கள் அதிகம் கூடும் இடங்களில் நகை திருடியது விசாரணையில் தெரிய வந்தத்து. மேலும் சமயபுரம் காவல் நிலையத்தில் 9 வழக்குகளும், மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்தில் 3 வழக்குகளும், கொள்ளிடம் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், லால்குடி காவல் நிலையத்தில் 3 வழக்குகள் என 16 வழக்குகள் ரேகா மீது பதிவு செய்யப்பட்டுள்ளது.

பல்வேறு இடங்களில் திருடிய 29 லட்சம் மதிப்புள்ள 64 1/2 பவுன் தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பின்னர் அவர் மீது வழக்கு பதிவு செய்த சமயபுரம் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.