மின்சாரம் பாய்ந்து பெண் பலி…

0 45
National

துவரங்குறிச்சியை அடுத்த வளநாடு அருகே உள்ள பிராம்பட்டி ஆத்துப்பட்டியை சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி ராதிகா(வயது 24). இந்த தம்பதிக்கு 7 மாத குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் நேற்று ராதிகா வீட்டில் கிரைண்டரில் மாவு அரைத்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்ததாக கூறப்படுகிறது. இதில் அவர் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக வளநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால் ஸ்ரீரங்கம் கோட்டாட்சியரும் விசாரணை நடத்துகிறார்.

Leave A Reply

Your email address will not be published.

எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்
error: Content is protected !!