பாஸ்போர்ட்டை கிழித்து சேதப்படுத்திய வாலிபர் கைது..

0 65
National

திருச்சி விமான நிலையத்திற்கு சிங்கப்பூரில் இருந்து நேற்று இண்டிகோ விமானம் வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது புதுக்கோட்டை காமராஜபுரம் பகுதியை சேர்ந்த பிரபாகரன் (வயது 32) என்பவரது பாஸ்போர்ட்டை சோதனை செய்தபோது 4 பக்கங்கள் கிழிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து பாஸ்போர்ட்டை சேதப்படுத்திய பிரபாகரனை விமான நிலைய போலீசில் அதிகாரிகள் ஒப்படைத்தனர். பின்னர் அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.

எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்
error: Content is protected !!