ஓய்வு பெற்ற நர்ஸ் கொலை வழக்கில் தேடப்பட்ட பெண் கைது
திருச்சி ஜீயபுரம் அருகே 5 பவுன் நகைக்காக ஓய்வுபெற்ற நர்ஸ் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தனிப்படை போலீசார் கொலை செய்த பென்னை கைது செய்தனர்.
திருச்சியை அடு்த்த முத்தரசநல்லூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் ராதா (வயது 70) – திருச்சி அரசு மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
ராதாவிற்கு ரஜினி (45) என்ற மகன் உள்ளார் – இவர் திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் பில் கலெக்டராக பணியாற்றி வருகிறார் – பிரசவத்திற்காக தாய் வீட்டுக்கு சென்ற தனது மனைவியை பார்க்க ரஜினி சென்று இருந்தார்.
இதனால் கடந்த 3-ந்தேதி வீட்டில் தனியாக இருந்த ராதாவை கொலை செய்துவிட்டு வீட்டை பூட்டி விட்டு மர்ம நபர் சென்றுவிட்டார்.
விசாரணையில் : ராதாவுக்கு சொந்த ஊர் லால்குடியை அடுத்த ஆலம்பாக்கம் என்பதும் – அவ்வூரை சேர்ந்த காந்தி என்பவர் ராதாவுடன் பழக்கம் ஏற்பட்டு உறவினர் போல் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றதும் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் காந்தியை பிடித்து நடத்திய விசாரணையில், நகைக்காக ராதாவை அவர் கொலை செய்தது அம்பலமானது – இதைத்தொடர்ந்து போலீசார் காந்தியை கைது செய்து அவரிடம் இருந்து நகைகளை மீட்டனர்.
பின்னர் கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.